
ஜொகூர் பாரு டிச 3
இங்கு ஜொகூர் பாரு அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின் 6 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 12 டிச 2024 வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த கும்பாபிஷேக கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆலயத்தின் துணைத் தலைவர் சண்முகம் செட்டியார் இங்குள்ள லார்க்கின் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய தலைவர் டாக்டர் சுப்பிரமணியத்திற்கு அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்தார்.
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து சிறப்பிக்குமாறு டாக்டர் சுப்பிரமணியத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் டிச 8 ஆம் தேதி ஆலயத்தில் பாலஸ்தாபனம் தொடங்குவதால் வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலய திருவிழாவிற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு மகத்துவம் வாய்ந்த கொண்டாட்டம் என்பதால், அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் ஆசியை வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


