
ஸ்கூடாய் ஏப் 3
பரத நாட்டிய கலையில் மதுர மார்க்கம் 4.0 டிப்ளோமா பயிற்சி தேர்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த மார்ச் 29 ஆம் தேதி இங்குள்ள ஸ்கூடாய் தமிழ் பள்ளியில் இந்த பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.
நாட்டிய மணி சிவாசனி சந்திரசேகர், நாட்டிய மணி தமயந்தி கீதாதரன், நாட்டிய மணி ஸ்ரீ தீபப்பிரியா சுகேந்திரன் மற்றும் நாட்டிய மணி ஸ்ரீ தேவிப்பிராய, நாட்டிய மணி மாரியா மிராஷினி ஜேம்ஸ் இந்த நிகழ்வில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு தலைமையுயற்ற மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய டத்தோ கே.எஸ் பாலகிருஷ்ணன் மற்றும் இதர அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .


