
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
நேற்று சென்னையில் உள்ள பாரதிராஜா இல்லத்தில் அவரது உடலுக்கு மாலை சார்த்தி தமிழக முதல்வர் இறுதி மரியாதை செலுத்தினார்.
தமிழ் திரையுலகத்திற்கு பெருமை சேர்த்துள்ள இயக்குனர் பாரதிராஜாவின் இறுதி ஊர்வலத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
உடல் நோய் குறைவினால் மரணம் அடைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு இறுதி மரியாதை செலுத்த தமிழக திரையுலகமே திரண்டு வந்தது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவக்குமார், ராதிகா, பிரபு உட்பட நூற்றுக்கணக்கான நடிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக திரையுலகத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி பெரும் சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கி தமிழ் திரை உலகத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர் இயக்குனர் மேதை பாரதிராஜா.
இதனிடையே பாரதிராஜாவின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று என இசை மேதை இளையராஜா கூறினார்.


