
இங்குள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 31 ஆம் ஆண்டு நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் கலைவாணியின் அருளை பெற ஒன்று கூடினர்.
சூரியம் நாட்டிய பள்ளியைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கலந்துகொண்ட அனைவரும் சரஸ்வதி அருளை பெற்றனர்.
இந்த விழாவில் மஇகா தேசிய மகளிர் பிரிவு தலைவியும் கெமேலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சரஸ்வதி நன்றி கூறினார்.
அதே வேளையில் இந்த விழா வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஆலய நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.


