
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் நிலவி வரும் பூசலைத் தொடர்ந்து தனது அரசியல் எதிர்காலம் குறித்து எம்ஐபிபி இவ்வாறு இறுதியில் முடிவு செய்யும் என அக்கட்சியின் தலைவர் புனிதன் கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் பங்காளி கட்சியான பெர்சாத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை முறித்துக் கொள்வதாக பாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்த எதிர்க்கட்சி கூட்டணி அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக எம்ஐபிபி தனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா என்பது குறித்து எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கட்சியின் உச்ச மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என புனிதன் குறிப்பிட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் பாஸ் மற்றும் பெர்சாத்து இணைந்து அமைத்த பெரிக்காத்தான் நேஷனலில் எம்ஐபிபி மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகள் அங்கத்துவம் பெற்றுள்ளன.
இதனிடையே எம்ஐபிபியின் அரசியல் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை வியாழக்கிழமை பாஸ் தலைமைத்துவம் புனிதனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே கெராக்கான் பெரிக்காத்தான் நேஷனலில் தொடர்ந்து நீடிக்கும் என அக்கட்சியின் தலைவர் டோமினிக் லாவ் நேற்று அறிவித்தார்.


