Thursday, June 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வரலாற்று சாதனையை படைத்துள்ள மோடிக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து!

இந்தியாவில் நீண்ட காலமாக பதவி வகித்து வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனையை படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பிரதமராக பதவி ஏற்ற மோடி நேற்று ஜூன் 9 ஆம் தேதி பிரதமராக 4,398 நாட்களை நிறைவு செய்து, இதற்கு முன் இந்த சாதனையை தம் வசம் வைத்திருந்த பண்டித ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தமது முகநூலில் பதிவு செய்த அன்வார், மோடியின் இந்த சாதனயானது பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க பொது சேவை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி, வளமை மற்றும் உலக அரங்கில் அதன் நிலையை உயர்த்திய தலைமையின் பிரதிபலிப்பு எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்தியாவுடனான நீண்டகால உறவை மதிப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி இருநாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular