
2025 3ஆவது மலேசிய தின கராத்தே போட்டியில் 400 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், கிளந்தான், திரங்கானு, பினாங்கு, பேராக் ஜொகூர் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 15 கிளப்புகள் இந்த போட்டியில் பங்கு பெற்றன.
இந்த போட்டியில் காஜாங் உத்தாமா இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ரக்ஸான் ராமச்சந்திரன் ஆண்களுக்கான காத்தா பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் ஜூனியர் பெண்களுக்கான காத்தா பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
அதே வேளையில் யூனித்தார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிஷாலினி குமார் சீனியர் பெண்களுக்கான காத்தா பிரிவில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
மலாயா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீதாலட்சுமி குமார் சீனியர் பெண்களுக்கான காத்தா பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
மேலும் இந்த போட்டியில் மலாயா பல்கலைக்கழக குழுவிற்கு சீதாலட்சுமி தலைமையேற்றார்.

இந்த கராத்தே போட்டியை ஈப்போ கராத்தே கிளப் மற்றும் பேராக் கோஜூ ரியூ செரேய்கான் ஏற்பாடு செய்தது.
இதன் ஏற்பாட்டாளர் ஈப்போ கராத்தே கிளப்பின் தலைவர் டாக்டர் உகிந்திரன் ராஜா சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் சிறப்பு பிரமுகராக பேராக் கோஜூ ரியூ செரேய்கான் கராத்தே சங்கத்தின் தலைவர் சிஹான் கிளேமன்ட் விக்டர் கலந்து கொண்டார்.
இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டாளர், போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் டாக்டர் ஹன்சி விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


