
ஆசியான் ஆடை அணிகள் கண்காட்சியை பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இங்குள்ள டத்தாரான் மியூசியம் நெகராவில் நடைபெறும் இந்த கண்காட்சியில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ அரொன் அகோ டாகாங், துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டார்.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பாரம்பரிய துணிகள் நெய்தல் முறை குறித்து இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆசியான் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் கலாச்சாரத்தை வளர்க்க இதுபோன்று கண்காட்சி துணை புரியும் டாக்டர் வான் அஸிஸா கூறினார்.
ஆசியா நாடுகளில் கலை மற்றும் கலாச்சாரங்கள் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
இதுபோன்று நடவடிக்கைகள் மக்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வளர்க்கும் என அவர் குறிப்பிட்டார்.


