
தேசிய இலக்கியவாதியான எ.சாமாட் சைட்டின் வரலாற்று நாடகமான சுங்கை மெங்காலிர் லெசு அரங்கேற்றம் கண்டது.
இந்த முதல் அரங்கேற்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் கல்வி அமைச்சர் பாட்லினா சிடெக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீன மக்களின் மனிதபிமான போராட்டத்திற்கு தமது பிளவு படாத ஆதரவு என்றும் இருக்கும் என டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

சாமாட் சைட்டின் இந்த நாவல் இலக்கிய படைப்பு மட்டுமல்லாமல் இது
மதிப்புமிக்க சமூக வரலாற்று பதிவு என்றார் அவர்.
இது போர் முனையில் மக்களின் கசப்பான அனுபவங்களை சித்தரிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
காலம் முழுவதும் மக்கள் நினைத்துப் பார்க்கும் அர்த்தமுள்ள படைப்பை தேசிய இலக்கியவாதி சாமாட் சைட் தந்துள்ளார் என பிரதமர் குறிப்பிட்டார்.


