
பெரிக்காத்தான் நேஷனல் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதி ஏற்பாடு செய்துள்ள தீபாவளி கொண்டாட்ட விழாவிற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் தடை விடித்துள்ளதை இத்தொகுதியின் பெரிக்காத்தான் நேஷனல் ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கடுமையாக சாடினார்.
இந்த முக்கிய கொண்டாட்டத்திற்கு பாக்காத்தான் ஹராப்பான்-தேமு தலைமையிலான மாநில அரசாங்கத்தின் ஜெம்போல் மாநகர் மன்றத்தின் தடை நியாயமற்றது என்றார் அவர்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு கூடாரம் அமைக்க கூடாது மற்றும் இதரை ஏற்பாடுகள் செய்யக்கூடாது என செப் 30 ஆம் ஜெம்போல் மாநகர் மன்றத்தின் அறிக்கை மிகவும் அதிர்ப்பத்தி அளிப்பதாக அவர் சுட்டி காட்டினார்.
ஜெம்போல் மாநகர் மன்றத்தின் இந்த செயல் மனிதாபிமானமற்ற மற்றும் ஒரு தலைப்பட்ச செயல் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் மாநில அரசாங்கம் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட தலைவர்களின் நடவடிக்கைக்கு சாலைகளை மூடவும் கூடாரம் அமைக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக அவர் சாடினார்.
ஆனால் இந்திய சமூகத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் நடத்தும் திட்டங்களுக்கு மாநில அரசாங்கம் பல தடைகளை விதித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்திய சமூகத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்யும் திட்டங்களுக்கு மட்டும் மாநில அரசாங்கம் ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இது போன்ற திட்டங்கள் தங்களின் அரசியலுக்கு பாதிப்பு ஏற்படும் என மாநில அரசாங்கம் கருதுகின்றனரா என அவர் கேள்வி எழுப்பினார்.
இருப்பினும் ஜெம்போல் மாநகர் மன்றத்தின் அனுமதியின்றி மக்களின் நலன்களுக்காக நல்ல திட்டங்களை நாங்கள் நடத்துவோம் என அவர் உறுதி அளித்தார்.
இந்த விவகாரத்தில் மக்களின் நலன்களுக்கு தாங்கள் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் சொன்னார்.


