
கெடாவின் லங்காவி அனைத்துலக விமான நிலையம் மற்றும் உஸ்பெகிஸ்தானின் தாஷ்காண்ட் அனைத்துலக விமான நிலையங்களுக்கிடயே முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
இந்த நேரடி விமான சேவை எதிர்வரும் 14 டிசம்பர் 2025-ல் தொடங்குகிறது.
லிங்காவின் புகழ் அதிகரிப்பு மற்றும் மத்திய அரசிய பயணிகளுக்களுக்கிடையே வெப்ப மண்டல அனுபவங்களின் ஆர்வத்தின் பிரதிபலிப்பாக இந்த புதிய வழித்தடம் தொடங்குகிறது.
இந்த புதிய நேரடி விமான சேவை சுற்றுப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதோடு லங்காவி மலேசியாவின் முன்னணி அனைத்துலக மையத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட இந்த வழித்தடம் மலேசியாவின் வட பிராந்தியம் மற்றும் மத்திய ஆசியாவின் தொடர்பை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
நடப்பில் உள்ள பாத்தேக் ஏரின் கோலாலம்பூர்-தாஷ்கண்ட் விமான சேவைக்கு இந்த புதிய வழித்தடம் வலிமையை சேர்க்கிறது.
கோலாலம்பூர் வழி இடைநிறுத்தம் செல்லாமல் வட மலேசிய பயணிகள் தாஷ்கண்ட் நகருக்கு தடையின்றி பயணிக்க இந்த புதிய வழித்தடம் பெரும் துணை புரிகிறது.
அழகான கடற்கரைகள், அடர்ந்த மழைக்காடுகள் தொடர்ந்து ஒரு உலக தர மையமாக லங்காவி விளங்கி வருகிறது.
லங்காவி தீவு தொடர்ந்து அதிகமான அனைத்துலக மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணிகளை கவர்ந்து வருகிறது.

தேசிய சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு லங்காவி மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
இதனிடையே லங்காவிக்கு வருகை புரியும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆதரவளிப்பதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
லங்காவி-தாஷ்கண்ட் நகரங்களுக்கிடையே இந்த நேரடி விமான சேவை மத்திய ஆசியா சுற்றுப்பயனைகளை அதிகம் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான லங்காவிற்கு உஸ்பெகிஸ்தான் சுற்றுப்பயணிகள் இப்போது தடையின்றி பயணிக்க முடியும் என்றார் அவர்.
மலேசியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாத்தேக் ஏர் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் பெருமை கொண்டார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தை ஆதரிக்க இந்த புதிய வழித்தடம் முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கோலாலம்பூர்-தாஷ்கண்ட் இடையிலான வாரத்திற்கு இரண்டு முறை பாத்தேக் ஏரின் நேரடி விமான சேவையை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய வழித்தடம் துணை புரியும் என அவர் தெரிவித்தார்.
உலகத்துடன் மலேசியாவின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ள இந்த புதிய வழித்தடம் உதவும் என அவர் தெரிவித்தார்.
உஸ்பெகிஸ்தானின் துடிப்பு மிக்க தலைநகரான தாஷ்கண்ட் அழகை கண்டு களிக்க வடமலேசிய பயணிகளுக்கு இது ஒரு அற்புத வாய்ப்பாகும்.
இந்த புதிய நேரடி விமான சேவை மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே சுற்றுலா மற்றும் வர்த்தக துறையை மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாத்தேக் ஏரின் நெட்வொர்க் விரிவாக்கத்தில் லங்காவி-தாஷ்கண்ட் விமான சேவை ஒரு முக்கிய மைல்கல் என அவர் தெரிவித்தார்.


