
ஃப்ளோரிடா:
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற 2025 எம்ரி-ரிட்டெல் ரன்னிங் எலிமென்ஸ் தடகள போட்டி தொடரில் மலேசியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஷிரீன் சம்சன் வல்லபோய் 400 மீட்டர் தடகள போட்டியில் வெற்றிப்பெற்றார்
26 வயதுடைய ஷிரீன் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 53.72 விநாடிகளைப் பதிவு செய்து வெற்றிப்பெற்றதை மலேசிய தடகள சம்மேளனம் அதன் முகநூலில் பதிவு செய்து ஷிரீனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது
400 மீட்டர் போட்டியில் வெற்றிப்பெற்ற ஷீரினுக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. அதேளையில் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் கேபி ஜான்சனும் மூன்றாவது இடத்தில் நெவெ லொர்ஜுஸ்தே வெற்றிப்பெற்றனர்
இவ்வாண்டுக்கான முதல் நிலை தடகள பட்டத்தை ஷிரீன் சம்சன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


