
2025 கராத்தே பயிற்சியாளர்களுக்கான முதல் நிலை தேர்வில் மாஸ்டர் சீதாலட்சுமி மற்றும் சென்ஷி ரிஷாலினி தேர்ச்சி பெற்றனர்.
இந்த பயிற்சியாளர்களுக்கான தேர்வு இங்குள்ள ஹோட்டல் ஸ்ரீ மலேசியாவில் நடைபெற்றது.
இந்த ப் தெருவில் செலாயாங் ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தைச் சேர்ந்த மாஸ்டர் சீதாலட்சுமி மற்றும் சென்ஷி ரிஷாலினி வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றனர்.

இவர்களின் இந்த தேர்ச்சி செலாயாங் ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே குழுவிற்கு பெருமை சேர்ப்பதாக மலேசியா ஒக்கினாவா ஃப்ரி ஸ்டாயில் கராத்தே சங்கத்தின் தலைவர் ஹன்ஷி டத்தோ டாக்டர் விஜய் கூறினார்.
இவர்கள் கராத்தே போட்டியில் தொடர்ந்து சாதனைகளைப் பெற தாம் வாழ்த்துவதாக அவர் தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர் கராத்தே சங்கத்தின் தலைவர் ஷிஹான் டத்தோ அறிவழகன் மற்றும் கோலாலம்பூர் புடொ கராத்தே சங்கத்தின் தலைவர் சென்ஷி மரியா ஆகியோருக்கு நன்றியை த் தாம் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
அதே வேளையில் இதன் ஏற்பாட்டாளர் சென்ஷி விக்ரம சூர்யாவிற்கு தனிப்பட்ட பாராட்டுதலை தாம் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.


