
16 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கான மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வருகை ஓர் அர்த்தமுள்ள தருணம்.
மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் முகமட் ஜொஹாரி இதனை கூறினார்.
பிரபல இங்கிலாந்து பிரிமியர் லீக் கிளப்பான மென்செஸ்டர் யுனைடெட் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவிற்கு வருகிறது.
அவ்வணியின் வருகை தேசிய கால்பந்தாட்டத்திற்கு ஒரு அர்த்தமுள்ள தருணம்.
இந்தப் போட்டி உலகத் தரம் வாய்ந்த ஆட்டத்தை உறுதியளிக்கிறது.
மேலும் இந்தப் பிராந்தியத்தில் கால்பந்து கலாச்சாரத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் குறிக்கிறது.
மே பேங்க் சேலஞ்ச் கிண்ண்ம் என்று பெயரிடப்பட்ட இந்த நட்பு ஆட்டத்தில், மென்செஸ்டர் யுனைடெட் அணி, பயிற்சியாளர் கிம் சாங் சிக் பயிற்சியளிக்கும் ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ் அணியை சந்திக்கிறது.
இந்த ஆட்டம் வரும் மே 28 அன்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி மலேசியாவிற்கு சிறப்பு வாய்ந்தது. அதே வேளையில் இது ஆசியானுக்குள் உள்ள ஒரு நாட்டிற்கு மட்டுமே.
மென்செஸ்டர் யுனைடெட் போன்ற பெரிய கிளப்பை நடத்துவது மலேசிய கால்பந்துக்கும் பிராந்தியத்திற்கும் ஒரு பெரிய மரியாதை என்று அவர் கூறினார்.


