
சிங்கப்பூர், சாங்கி விமான நிலையத்தில் லையன் குழுமத்தின் பாத்தேக் ஏர் மலேசியா, பாத்தேக் ஏர் இந்தோனேசியா மற்றும் தாய் லையன் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் முனையும் 4-க்கு மாற்றப்படுகிறது.
இந்த மாற்றம் எதிர்வரும் 11 நவம்பர் 2025 நடைமுறைக்கு வருகிறது.
இந்த மாற்றத்தின் மூலம் பயணிகள் ஒரு நவீன, தடையற்ற பயணத்தை அனுபவிக்க முடியும்.
தானியங்கி சேவைகளின் மூலம் செக்-இன் போர்டிங் செய்து கொள்ளலாம்.
இந்த செயல்பாடு மாற்றத்தில் தென்கிழக்கு ஆசை முழுவதும் பயணிகள் எளிதாக மற்றும் சௌகரியமாக பயணிக்கலாம்.
முனையம் 3-லிருந்து முனையும் 4-க்கான மாற்றம் லையன் குழுமத்தின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
ஆண்டுதோறும் 16 மில்லியன் பயணிகளை கையாள முனையும் 4 வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையம் முழுமையான தானியங்கி சுயசேவை அமைப்பு உள்ளிட்ட தனித்துவமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இது விமான நிலைய அனுபவத்தை பயணத்தின் ஒரு பகுதியாக மாற்றுகிறது.
இதனிடையே
சிங்கப்பூரில் லையன் குழுமத்தின் நீண்டகால வளர்ச்சி உத்தியில் இந்த இடமாற்றம் ஒரு முக்கியமான படியாகும் என பாத்தேக் ஏர் மலேசியா விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
“எங்கள் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முனையும் 4 அனைத்து நவீன வசதிகளை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பயணிகளுக்கு தடையற்ற சேவை மற்றும் உலக தர விமான நிலைய அனுபவத்தை தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘சிங்கப்பூர் எப்போதும் எங்களுக்கு ஒரு முக்கியமான இடமாக இருந்து வருகிறது, மேலும் பாத்தேக் ஏர் இங்கு தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறது’ என்றார் அவர்.
எதிர் வரும் 8 டிசம்பர் 2025-ல் சிங்கப்பூரிலிருந்து ஈப்போ, பினாங்கு மற்றும் சுபாங்கிற்கு புதிய வழித்தடங்களை தொடங்க நாங்கள் தயாராகி வரும் நிலையில், முனையும் 4-க்கு இளம் பெயர்வது சரியான நேரத்தில் வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய வழித்தடங்கள் பாத்தேக் ஏரின் தற்போதைய கோலாலம்பூர் சேவைகளுடன் சேர்ந்து, பயணிகளுக்கு விரிவான பயணங்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதாக அவர் சுட்டி காட்டினார்.
அதே வேளையில் இந்த விரிவாக்கம் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்திற்கு இது முக்கிய பங்காற்றும் என்றார் அவர்.
முனையும் 4-க்கான நகர்வு மற்றும் புதிய சேவைகளுடன் பாத்தேக் ஏர் பயணத்தை மிகவும் வசதியாகவும் நெகிழ்வாகவும் ஆக்குகிறது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே பயணிகள் தங்கள் விமான விவரங்களை சரிபார்த்து முன்கூட்டியே திட்டமிட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும் தகவல்களுக்கும் உங்கள் அடுத்த பயணத்தை திட்டமிடுவதற்கும் Batik Air மொபைல் செயலியை பதிவிறக்கவும் அல்லது www.batikair.com ஆகப் பக்கத்தில் வலம் வரலாம்.


