
அனைத்துலக மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி உலக மலையாளிகள் சம்மேளன மலேசிய மகளிர் அணி ‘ஷலபங்கள் 2.0’ என்ற மாபெரும் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.
இந்த மாபெரும் நிகழ்வு எதிர்வரும் 22 மார்ச் சனிக்கிழமை நடைபெறவிருப்பதாக உலக மலையாளிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஷார்மிளா நாயர் கூறினார்.
தலைநகர் பிரிக்பில்ட்ஸில் உள்ள YMCA மண்டபத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என அவர் சொன்னார்.
இந்த கொண்டாட்டத்தில் பல அற்புதமான நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக அவர் சொன்னார்.
வருகையாளர்களை உற்சாகப்படுத்த நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றார் அவர்.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம், அற்புதமான உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் உங்களை மகிழ்விக்கும்.
பெண் தொழில் முனைவர்கள் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வியாபார கண்காட்சி வருகையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தும் என அவர் சொன்னார்.
உங்கள் வாழ்க்கையின் அற்புத மகளிரின் அற்புதத்தை கண்டறிய இந்த நிகழ்ச்சிக்கு கணவர்கள், தந்தையர்கள், சகோதரர்கள் மற்றும் புதல்வர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர். நேரில் வந்து இந்த அற்புத மகளீரின் பெருமைகளை கண்டறிய இது ஒரு அற்புதமான வாய்ப்பு ஏன் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வெங்கடாசலம் முக்கிய பங்காற்றுகிறார் என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்ச்சி வெற்றியடைய முக்கிய ஆதரவாளரான கிளினிக் பாக்கார் வனிதாவை சேர்ந்த டாக்டர் ரேணுவிற்கு இவ்வேளையில் தாங்கள் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு கலந்துகொண்டு ஆதரவு தருமாறு ஷர்மிளா நாயர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் குழந்தை மருத்துவர் டாக்டர் பிரியா சதீஷ் சந்திரன் உரை நிகழ்த்துவார்.
டாக்டர் பிரியா சதீஷ் சந்திரன் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குழந்தைகள் குறித்து விளக்கம் தருவார். இந்த நிகழ்ச்சி தொடர்பான மேலும் தகவல்களை பெற
ராஜலட்சுமி
018-3940141
பாவியா
+919620562675
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


