Sunday, June 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ICAO மன்றத்திற்கு மலேசியா மீண்டும் தேர்வு!

2025-2028 தவணை காலத்திற்கு ICAO மன்றத்திற்கு மலேசியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வு உலகளாவிய வான் போக்குவரத்து தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.
ICAO மன்ற தேர்தல்களில் மலேசியா 154 வாக்குகள் பெற்று 7 ஆம் நிலைக்கு உயர்ந்தது.
கடந்த 2022 தேர்தல்களில் மலேசியா 136 வாக்குகள் பெற்று 13 ஆவது நிலையை அடைந்தது.
இந்த தேர்தலின் மூலம் தொடர்ந்து ஏழாவது தவணையாக ICAO மன்றத்திற்கு மலேசியா தேர்வு பெற்றுள்ளது.
இம்முறை இந்த தேர்தல் கடந்த 30 செப்டம்பர் 2025-ல் கனடாவில் உள்ள மாண்ட்ரீல் நகரில் நடைபெற்றது.


மலேசியாவின் மீண்டும் இந்த வெற்றியை தொடர்ந்து மலேசியா அரசாங்கம், போக்குவரத்து அமைச்சு, மலேசிய சிவில் வான் போக்குவரத்து கழகம் ஆகிய தரப்பினருக்கு நாட்டின் மிக முக்கிய விமான நிறுவனங்களை பிரதிநிதிக்கும் மலேசிய விமான குழுமம், ஏர் ஆசியா மற்றும் பாத்தேக் ஏர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டன.
இந்த வெற்றியானது மலேசியாவின் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் உலகளாவிய சிவில் விமான போக்குவரத்தை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அனைத்துலக சமூகம் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
அனைத்துலக விமான போக்குவரத்தை வடிவமைப்பதில் ICAO முக்கிய பங்காற்றுகிறது.
இதில் பாதுகாப்பு தரங்களை நிறுவுதல், கொள்கை கட்டமைப்புகளை வழி நடத்துதல் மற்றும் 193 ICAO உறுப்பு நாடுகளுக்கு மூலோபாய முன்னுரிமைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்.
இந்த மன்றத்தில் மலேசியாவின் தொடர்ச்சியான அங்குத்துவம் உலகளாவிய விமான போக்குவரத்து பேச்சுவார்த்தைகளுக்கு நாட்டின் தீவிர பங்களிப்பை உறுதி செய்கிறது.அதே வேளையில் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துகிறது.
இந்த மைல்கல் போக்குவரத்து அமைச்சு மற்றும் மலேசிய சிவில் வான் போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் தலைமைத்துவத்திற்கு ஒரு அங்கீகாரமாகும்.
இதனிடையே ICAO மன்றத்திற்கு மலேசியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டது, நாட்டிற்கு கிடைத்த பெருமை என மலேசிய விமான போக்குவரத்து குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ கேப்டன் இஸாம் இஸ்மாயில் கூறினார்.
உலகளாவிய விமான போக்குவரத்து நிகழ்ச்சி நேரலை வடிவமைப்பதில் நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய குரலாக நாட்டின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும் மலேசியாவின் ஆற்றலில் உலகளாவிய சமூகத்தின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்த விவகாரத்தில் மலேசியாவை ஆதரிப்பதில் மலேசிய விமான போக்குவரத்து குழுமம் உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ICAO மன்றத்திற்கு மலேசியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது நாட்டின் விமான போக்குவரத்து தலைமைத்துவத்தின் மீது அனைத்துலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பாக ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
மேலும் குறைந்த விலை பயணத்தை முன்னோடியாக கொண்டு, கோலாலம்பூரை உலகின் முன்னணி எல்சிசி மெகாஹப்பாக நிலை நிறுத்துவதில் நாங்கள் ஆற்றிய பங்கை இது வலுப்படுத்துகிறது என்றார் அவர்.
மேலும் மலிவு, நிலையான மற்றும் உள் அடக்கிய இணைப்பின் சாம்பியனாக மலேசியாவின் முன்னேற்றத்தை இந்த வெற்றி பிரதிபலிப்பாக.
மேலும் அனைத்துலக வான் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு ஏர் ஆசியாவின் பங்களிப்பு தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே ICAO மன்றத்திற்கு மலேசியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டது நாட்டிற்கு கிடைத்த ஒரு சாதனை என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த தேர்வு நாட்டிற்கு கிடைத்த பெருமை மட்டுமின்றி உலகளாவிய விமான போக்குவரத்தில் நாட்டின் தலைமைத்துவம் மற்றும் நம்பகத்தன்மையை பிரதிபலிப்பாக அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசிய வான் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு பாத்தேக் ஏரின் பங்களிப்பு தொடரும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த சாதனை அனைத்துலக அரங்கில் நமது நாட்டின் செல்வாக்கை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பு, புதுமை மற்றும் செயல்பாட்டு சுரப்பில் தொடர்ந்து உயர விமான போக்குவரத்து துறையில் உள்ள நாம் அனைவருக்கும் ஒரு பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும் மலேசியா தொடர்ந்து வெற்றி பெற பாத்தேக் ஏர் துணை நிற்கும் என அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular