Sunday, June 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சமூக பாதுகாப்பிற்கு இந்தியா முன்னுரிமை வழங்கி வருகிறது!

நாட்டின் சமூக பாதுகாப்பிற்கு இந்தியா முன்னுரிமை வழங்கி வருவதாக அந்நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை இணை அமைச்சர் டாக்டர் மன்சுக் மன்டாவியா கூறினார்.
மக்களின் சமூக பாதுகாப்பிற்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 19 விழுக்காட்டிலிருந்து தற்போது 64 விழுக்காடாக விரிவாக்கம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் வழி இந்திய குடியரசில் 940 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று தலைநகரில் உலக சமூக பாதுகாப்பு உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண் டு அவர் பேசினார்.
இந்த உச்ச நிலை மாநாட்டில் 2025 அனைத்துலக சமூக பாதுகாப்பு சங்கத்தின் விருதை டாக்டர் மன்சுக் பெற்றுக் கொண்டார்.


இதன் பின் அனைத்துலக சமூக பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் மலேசிய சமூக பாதுகாப்பு கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மானுடன் டாக்டர் மன்சுக் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமூக பாதுகாப்பு விரிவாக்கத்தில் இந்தியாவின் பங்கு குறித்து டத்தோஸ்ரீ முகமட் அஸ்மான் வெகுவும் பாராட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வரும் என அவர் சொன்னார்.
நாட்டின் சமூக பாதுகாப்பிற்கு இந்தியாவின் பங்கு அளப்பரியது என டத்தோஸ்ரீ முகமட் அஸ்மான் டாக்டர் மன்சுக்கை பாராட்டினார்.
இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமைத்துவத்தின் கீழ் இந்திய அரசாங்கம் பெரும் பங்கை ஆற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உச்ச நிலை மாநாட்டில் உகாண்டாவின் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு துறை இணை அமைச்சர் மெத்தி அமொன்கியுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.


இதனிடையே சமூக பாதுகாப்பு விவகாரத்தில் தொழிலாளர்கள் நலன்களில் முக்கியத்துவம் வழங்கப்படும் என சொன்னார்.
இந்த உச்ச நிலை மாநாட்டில் மலேசியா மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிடன் டாக்டர் மன்சுக் பல்வேறு திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே விருந்து வரும் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பற வேண்டும் இந்த சந்திப்பில் டாக்டர் சிம் வலியுறுத்தினார்.
இந்தியா மலேசியாவின் ஒரு முக்கிய பங்காளித்துவ நாடு என்றார் அவர்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சொன்னார்.
சமூக பாதுகாப்பு விவகாரங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாக ஸ்டீவன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular