Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

திருமதி கிளாமர் தோற்றம் அழகு ராணி போட்டியில் டாக்டர் கீதா வெற்றி!

கோலாலம்பூர் டிச 10
திருமதி கிளாமர் தோற்றம் அழகு ராணி போட்டியில் ஜொகூர் பாருவை சேர்ந்த டாக்டர் கீதா தேவி சுப்பிரமணியம் வெற்றி பெற்று பெருமை சேர்த்தார்.
அண்மையில் பிலிப்பைன்ஸ், மணிலாவில் நடைபெற்ற 2024 திருமதி கிளாமர் சூப்பர் நேஷனல் போட்டியின் இரண்டாவது இடத்தை லலிதா தமிழ் வீரன் பெற்றார்.
இந்த அனைத்துலக போட்டி அண்மையில் மணிலாவில் லன்கேஸ்டர் ஹோட்டலில் வெகு சிறப்பாக நடந்தேறியது.


இந்த போட்டியில் மற்றொரு அங்கமாக அனைத்துலக பாரம்பரிய அழகி போட்டியில் திருமதி தாஷா ஸ்ரீ வெற்றி பெற்றார்.
இந்த போட்டியில் அனைத்துலக சுற்றுலா திருமதி அழகியாக தக்ஷயினி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.
அதே வேளையில் இந்த போட்டியில் ஆண்களுக்கான மிஸ்டர் கிளாம் விருதை சிவப்பிரகாசம் தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து 4 பெண்கள் மற்றும் 1 ஆண் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திருமதி பிரிவில் 12 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்து வரும் தாம், அழகு ராணி போட்டியிலும் பங்கு பெற முடியும் என்பதை நினைத்து பெருமை கொள்வதாக கோல்ட் செம்யியன் மெனெஜ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனருமான டாக்டர் கீதா கூறினார்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதே தமது நிலைப்பாடு என்றார் அவர்.


இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற தாம் ஆர்வம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நமது இந்திய பெண்மணிகள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த போட்டி வெற்றியடைய முழுமையான ஆதரவை வழங்கிய அபு காரியம் & டத்தோ பாடுக்கா டாக்டர் எம்ஏ. பிரகாஷ், சங்கரி பியுட்டி கேர் அக்கடமி & வாசுகி பிரைடல் ஹென்னா ஆர்ட்ஸ், ரோகினி சண்முகம், சீ கின் சாய் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டன. இதனிடையே மணிலாவிற்கு சென்று இந்த விருதுகளை பெற எங்களுக்கு வாய்ப்புகள் வழங்கிய கிளாம் பெஜன்ட் மெனெஜ்மன்ட் தேசிய இயக்குனர் திருமதி மகாலட்சுமி & கியுபெ ஏரா என்டர்டெயின்மென்ட் ஆகிய தரப்பினருக்கு டாக்டர் கீதா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular