Saturday, July 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பு தேசிய முன்னணிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்!

பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பு தேசிய முன்னணிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்
ஜெராம் பாடாங் ஜூலை 24
பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பு தேசிய முன்னணிக்கு நஷ்டத்தை தான் ஏற்படுத்தும் என பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்ஜீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
முஸ்லிம் அல்லாத வாக்காளர்கள் இந்த ஒத்துழைப்பை முற்றிலும் நிராகரிப்பர் என பெர்சாத்து கட்சியின் ஜெராம் பாடாங் சட்டமன்ற வேட்பாளருமான அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒத்துழைப்பின் காரணமாக தேசிய முன்னணியின் வலிமையான ஆதரவாளர்களான இவர்களின் ஆதரவை தேசிய முன்னணி இழக்கக்கூடும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கட்சி தலைமைத்துவத்தின் முடிவை இவர்கள் பின்பற்ற மாட்டார்கள். இவர்களுக்கு தங்களின் நிலைப்பாடு உண்டு என அவர் குறிப்பிட்டார்.
பாஸ் தங்களின் அரசியல் தேர்வு அல்ல என்பது தான் மஇகா மற்றும் மசீச ஆதரவாளர்களின் நிலைப்பாடு என அவர் கூறினார்.
குறிப்பாக இந்திய சமூகத்தில் பெரும்பாலோர் பாஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
காரணம் குறிப்பாக பாஸ் தலைவர் ஹாடி அவாங்கின் இனவாத பேச்சுகளில் இந்தி சமூகத்தினர் அதிர்த்தி கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அந்தக் கட்சியுடன் அம்னோவின் அரசியல் ஒத்துழைப்பு தேசிய முன்னணிக்கு பாதகமாக தான் முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக பெர்சாத்து வேட்பாளர்கள் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவது ஒரு நம்பிக்கை தந்துள்ளதாக அவர் சொன்னார்.
கடந்த காலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வந்ததைவிட, சொந்தக் கட்சி சின்னத்தின் கீழ் போட்டியிடுவது ஒரு புத்துணர்ச்சியை தருவதாக சஞ்ஜீவன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular