Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய வரலாற்று ஆய்வாளர்கள் மன்றம் அமைக்கப்படும்!

கோலாலம்பூர், டிசம்பர் 9-
நாட்டின் வரலாற்று உண்மைகள் திசை திருப்பப்படும் சம்பவங்களை கையாள தேசிய வரலாற்று ஆய்வாளர்கள் மன்றம் அமைக்கப்படும் என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
கடந்த 4 டிசம்பர் 2024 மேலவை தலைவர் செனட்டர் டத்தோ அவாங் பெமீ, துணை மேலவை தலைவர் செனட்டர் டத்தோ நூர் ஜஹான் மற்றும் செனட்டர் புவான் ரித்தா சரிமா ஆகியோர் கலந்து கொண்ட மேலவை கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக பேசப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய வரலாற்று ஆய்வாளர்கள் நின்றது அமைக்கப்பட வேண்டும் என கடந்த 19 செப்டம்பர் 2024 துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹாமிடி பரிந்துரை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய காப்பகத்தின் வழி தேசிய ஒற்றுமை துறை அமைச்சு மகஜர் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த மகஜர் நன்கு பரிசீலனைக்கு பிறகு அமைச்சரவையின் ஒப்புதல் மற்றும் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்படும் என அவர் சொன்னார்.
தேசிய வரலாற்று ஆய்வாளர்களின் மன்றம் கீழ்க்கண்டபடி செயல்படும்;

  1. தேசிய வரலாறு தொடர்பான எந்தவொரு சர்ச்சை குறித்து கையாளவும் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறும் அதிகாரத்துவ அமைப்பாகும்
  2. நாட்டின் வரலாறு தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் அமைப்பாகும்
  3. பல்லின மக்கள் மலேசியா அடையாளத்திற்கு ஏற்ப நாட்டின் வரலாற்று கல்வியை வலுப்படுத்த சிந்தனை மற்றும் புதிய யோசனைகளை வழங்கும் அமைப்பாகும்
  4. கூறப்பட்ட தரப்பினர் நாட்டின் வரலாறு உண்மைகளை திசை திருப்பும் முயற்சிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும்
  5. தேசிய வரலாறு எழுதுவதில் வரலாறு உண்மைகள் மீதான தகவல்களை வழங்கும் அதிகாரத்துவ அமைப்பாகும்
  6. நாட்டின் வரலாறு தொடர்பான தகவல்களை சேகரிக்க மட்டும் புதுப்பிக்க தேவைப்படும் செலவுகளை பரிந்துரை செய்யும்
    மலேசிய மக்களின் நிலைத்தன்மை, அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்தும் முயற்சிகள் தேசிய வரலாற்றை மெருகூட்ட இந்த தேசிய வரலாற்று ஆய்வாளர்கள் மன்றம் துணை புரியும் என செனட்டர் சரஸ்வதி நம்பிக்கை தெரிவித்தார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular