Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நடந்த கராத்தே போட்டியில்சீதாலட்சுமி வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றார்

கோலாலம்பூர் நவ 28
அண்மையில் சென்னையில் நடந்த 2024 FCKA கராத்தே போட்டியில் மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி குமார் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
சென்னை, கோட்டிவாக்கம் நெல்லை நாடார் இடைநிலைப் பள்ளியில் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் மலேசியாவின் சீதாலட்சுமி குமார் பெண்களுக்கான சீனியர் குமித்தே பிரிவில் வெள்ளி மற்றும் பெண்களுக்கான சீனியர் காத்தா பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இந்திய கராத்தே அகாடமி சேம்பியன்ஷிப் ஏற்பாடு செய்த இந்த போட்டியில் மொத்தம் 900 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த போட்டியை ஏற்பாடு செய்த FCKA நிறுவனரும் தலைவருமான எம். ரங்கராஜ், வெற்றியாளர்கள் மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மாஸ்டர் கியோஷி விஜய் மற்றும் கெடா கராத்தே கழகத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இந்தப் போட்டியை வெற்றி அடைய செய்த இந்திய மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் டாக்டர் டி.சுரேஸ் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular