Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்!

கோலாலம்பூர் நவ 28
மலேசிய கோடீஸ்வர டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் காலமானார்.
மெக்ஸிஸ் மற்றும் அஸ்ட்ரோ மலேசியா பெர்ஹாட் நிறுவனங்களின் உரிமையாளரும் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் இன்று தமது 86 ஆவது வயதில் காலமானார்.
ஆனந்த கிருஷ்ணனின் தலைமையிலான Usaha tegas Sdn Bhd முதலீட்டு நிறுவனம் இன்று இவரின் மரணத்தை உறுதிப்படுத்தியது.
இந்நாட்டின் மேம்பாட்டிற்கும் பெரு நிறுவன உலகிக்கும் இவர் பெரும் பங்காற்றி வந்துள்ளார்.
இவரின் இரக்கம் சார்ந்த பணிகள் பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளது.
மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இவர் மூன்றாம் நிலையில் இருந்து வந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular