Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

23 % கழிவு கட்டணத்துடன் ஏர் ஆசியா 23 ஆம் ஆண்டு மாபெரும் கொண்டாட்டம்!

செப்பாங் நவ 27
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, 23 % கழிவு கட்டணத்துடன் தனது 23 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை தொடங்கியது.
இந்த சிறப்பு கழிவு கட்டணத்தில் லங்காவி, ஸ்ரீ விஜயபுரம் (ஏற்கெனவே போர்ட் பிளேர் என்று அழைக்கப்பட்டது) மற்றும் சிட்னி போன்ற நகரங்களில் உள்ள அழகுமிக்க கடற்கரைகளில் உங்கள் பொழுதை கழிக்கலாம்.
மேலும் சென்ஜென், ஜெய்ப்பூர், டா லாட் உட்பட்ட இதர அழகிய நகர்களின் வளமான கலாச்சாரத்தை அனுபவித்து பார்க்கலாம். இந்த மாபெரும் கழிவு கட்டணங்களில் வாழ்க்கையில் ஒரு முறையாவது கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா தலைநகரான நைரோபி, கஜகஸ்தானின் அற்புத நகரான அல்மாட்டி, சீனாவின் எழில்மிக்க நகரான சொங்கிங் ஆகிய இடங்களுக்கு சிறகடிக்கலாம்.


மேலும் ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளில் உள்ள குளிர்கால அதிசய உலகிற்கு சென்று அங்குள்ள அழகை ரசித்து பார்க்கலாம்.
இந்த சிறப்பு கழிவு கட்டண டிக்கெட்டுகளை உயிர் வரும் 1 டிசம்பர் 2024-குள் Air Asia MOVE மற்றும் airasia.com செயலிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் புத்தாண்டு வெளிநாட்டு பயணங்களை திட்டமிட உங்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இந்த சிறப்பு கழிவு கட்டண டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் இன்னும் பல சலுகைகளை ஏர் ஆசியா உங்களுக்கு வழங்குகிறது.
அண்மையில் நடைபெற்ற உலக விமான பயண விருதுகள் விழாவில் 12 ஆவது முறையாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவன விருதையும் 8 ஆவது ஆண்டாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான சிப்பந்தி விருதையும் ஏர் ஆசியா பெற்று வரலாற்றைப் படைத்தது.
இலட்சக்கணக்கான பயணிகள் தங்களின் வாக்குகளை அளித்து ஏர் ஆசியாவை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மலிவு கட்டணத்தில் தனது பயணிகளை உலகின் முன்னணி நகரங்களுக்கு இணைப்பதில் ஏர் ஆசியா வெற்றிக் கண்டுள்ளதை இந்த சாதனை காட்டுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular