Tuesday, September 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஒற்றுமையாய் ஒரு குரலாய் திரண்டு வந்து வாக்களியுங்கள்!

ரொம்பின் ஜூலை 28
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையாய் ஒரு குரலாய் திரண்டு வந்து வாக்களிக்கும் படி ஜெராம் பாடாங் வாக்காளர்களுக்கு அந்த தொகுதியின் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள் ஒற்றுமையுடன் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
ஒற்றுமையே நமது பலம் என்பதை இங்குள்ள இந்திய சமூகத்தினர் உணர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே ஜெராம் பாடாங் தொகுதியில் மக்களின் அடிப்படை வசதி விவகாரங்களில் நடப்பு பராமரிப்பு அரசாங்கம் அலட்சியம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள தாமான் ஜெயாவில் 5 லட்சம் வெள்ளி செலவில் வட்டச் சந்திப்பு(Roundabout) ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டச் சந்திப்பை இங்குள்ள மக்கள் பயன்படுத்துவது மிகவும் அரிதே.
இந்த 5 லட்சம் வெள்ளிக்கு பள்ளி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்கி தந்திருக்கலாம்.
மேலும் இந்த வட்டாரத்தில் உள்ள பல வீடுகளில் கூரைகள் மோசமான நிலையில் உள்ளன.
இந்த பணத்தைக் கொண்டு இங்குள்ள வீடுகளின் குறைகளை பழுது பார்ப்பு செய்திருக்கலாம்.
இந்த தாமான் ஜெயாவில் உள்ள மக்கள் இதை நோக்கும் பிரச்சனைகள் என்ன என்பது தமக்கு நன்கு தெரியும் என அவர் குறிப்பிட்டார்.
காரணம் எனது பெற்றோர்கள் இன்னும் இங்கு தான் வசித்து வருகின்றனர் என அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இங்கு பெல்டா ரொம்பினுக்கு சொல்லும் சாலையில் ஒரு விளையாட்டு மைதானம் 2 லட்சம் வெள்ளிக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைனாத்தில் விளையாட இங்கு மாணவர்களே இல்லை. இரவு நேரங்களில் பேய்கள் தான் இங்கு விளையாட முடியும் என நகைச்சுவையாக அவர் கூறினார்.
இந்த திட்டங்கள் இங்குள்ள மக்களை கேட்டு நிர்மாணிக்கப்பட்டதா? அல்லது தன்னிச்சையாக நிர்மாணிக்கப்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
இங்கு ஸ்ரீ ரொம்பினில் மக்கள் தண்ணீர் பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடப்ப அரசாங்கம் ஒரு தண்ணீர் தாங்கியை கட்டி இருக்கலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது இங்குள்ள மக்களின் கையில் தான் உள்ளது.
ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் உங்களின் பிரதி நிதியை கவனமாக இங்குள்ள மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தாம் கேட்டு அறிந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் தேர்தலில் இங்குள்ள வாக்காளர்கள் தம்மை வெற்றி பெறச் செய்தால், ஜெராம் பாடாங் தொகுதியில் பெரிய மாற்றத்தை தாம் கொண்டு வரப் போவதாக சஞ்சீவன் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular