Saturday, July 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

டி20 கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

இந்தியா – ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.

ஹராரே, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் (ஜூலை 23, 25 மற்றும் 26-ந் தேதி) பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா – ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.

இந்திய அணி

20 ஓவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய அணி புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் அயர்லாந்துக்கு சென்று விளையாடியது. அங்கு இரு ஆட்டங்களிலும் மோசமான தோல்வியை தழுவியது. தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் நடந்த 20 ஓவர் தொடரை யும் 0-4 என்ற கணக்கில் தாரை வார்த்தது. ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் ஷிப்பில் இந்திய அணி இன்னும் வெற்றிக் கணக்கை (6-ல் தோல்வி, ஒன்றில் முடிவில்லை) தொடங்கவில்லை. இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் அவர் இந்த தொடரிலாவது முத்திரை பதிப்பாரா? என்பதே ரசிகர்களின் ஆவலாகும்.

சூர்யவன்ஷி

மேலும் 15 வயதான ‘அதிரடி புயல்’ வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து தொடரில் (14, 13 மற்றும் 15 ரன்) எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க வில்லை. இளையோர் மற்றும் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்து பல சாதனைகளை புரிந்த சூர்யவன்ஷி, ஜிம்பாப்வே தொடரில் சாதிக்கும் உத்வேகத்துடன் காத்திருக்கிறார். 4 மாதங்களில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல் மிடில் வரிசைக்கு ரிங்கு சிங்கின் வருகை பலம் சேர்க்கும். பந்து வீச்சில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்,யாஷ் தாக்குர், ஹர்ஷ் துபே உள்ளிட்ட இளம் வீரர்கள் கைகொடுக்க வேண்டியது முக்கியம். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சற்று சாதகமாக இருக்கும். அதே நேரத்தில் பவுன்சும் காணப்படும். அதற்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்வது தான் சவாலானதாகும்.

ஜிம்பாப்வே அணி

ஆல்-ரவுண்டர் சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டில் அந்த அணி, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற அணிகளை வீழ்த்தி இருக்கிறது. அத்துடன் இந்தியா, சிறிய அணியான அயர்லாந்திடம் தோற் றதால் ஜிம்பாப்வே இந்த முறை கூடுதல் நம்பிக்கையோடு மல்லுக்கட்டும். இந்தியாவுடன் இதற்கு முன்பு ஆடிய நான்கு 20 ஓவர் தொடர்களில் ஒன்றை கூட ஜிம்பாப்வே கைப்பற்றியதில்லை. எனவே புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular