Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

PKDK கராத்தே போட்டியில் யோகிஷா தனபாலன் தங்கம் வென்றார்!

ஜொகூர் பாரு நவ 21
2024 PKDK கராத்தே போட்டியில் ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
16 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் காத்தா பிரிவில் தங்கம் மற்றும் குமித்தே பிரிவில் வெண்கல பதக்கமும் இவர் வென்றார்.
இவரின் இந்த வெற்றி கெடா கராத்தே சங்கத்திற்கு பெருமை சேர்ப்பதாக சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் கூறினார்.
இவரின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் கோமதி சுப்பிரமணியத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இவரின் இந்த வெற்றிக்கு பேராதரவு வழங்கிய ஏற்பாட்டுக் குழு தலைவர் விக்னேஸ்வரன், டத்தோ என்னடி, மாஸ்டர் விஜய் டாக்டர் ராமன், வெற்றியாளர்கள் மற்றும் போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


இந்த போட்டியில் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ஜொகூர் ஷொரின்-ரூ செய்புகான் கராத்தே சங்க தலைவர் விக்ரம சூர்யா சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular