
அலோர் காஜா, நவ 13
நேற்று முன்தினம் நடந்த விபத்து ஒன்றில் அசாஹான் சட்டமன்றத் தொகுதியின் பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் பிரதிநிதி ஜே. சாமிவேல் மரணம் அடைந்ததை தொடர்ந்து அன்னாரின் குடும்பத்தினருக்கு தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
அன்னாரின் திடீர் மரணம் அன்னாரின் குடும்பத்தினருக்கும் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் ஒரு பேரிழப்பு என யுனேஸ்வரன் கூறினார்.
தாம் இளமை காலத்தில் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னரே அன்னாரை தமக்கு நன்கு தெரியும் என்றார் அவர்.
குறிப்பாக மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் காலத்தில் அன்னாரின் திடீர் மறைவு, மிகவும் வருத்தமான சம்பவம் என அவர் சொன்னார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு இறைவன் மன தைரியத்தை வழங்க தாம் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டார்.



