Saturday, November 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஹாரி அவாங் பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது – பக்கத்தான் தலைவர்கள் “மதத்தை வைத்து ஊழலை நியாயப்படுத்தாதீர்” என கண்டனம்!

கோலாலம்பூர், நவ 14

மலாக்கா 13 நம்பர் 2026 – Abdul Hadi Awang பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்  புக்கிட் கத்திலில் நடந்த கூட்டு Barisan Nasional  –  Perikatan Nasional பிரச்சார மேடையில், “ மிகவும் தீய முஸ்லிம்கள் நாட்டை ஆளும் மிக மோசமான முஸ்லிம்கள் கூட, முஸ்லிம் அல்லாதவர்களைப்” என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கருத்து வியாழக்கிழமை இரவு 12 நவம்பர் புக்கிட் கத்திலில் (Bukit Katil)  நடந்த பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN)  பிரச்சார பேரணியில் பேசப்பட்டது.

ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதாரவாளர்கள் முன்னிலையில், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இந்த இறுதிக்கட்டப் பேரணியில் ஹாடி அவாங்  இஸ்லாமிய அரசியல் பாவம் – புண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சி மிகவும் அடக்கு முறையானது என்றும் வலியுறுத்தினார். மலாக்கா பிரச்சார மேடையில் அவர் முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது என பல தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். நான்கு முஸ்லிம் ஜசெக (DAP)  தலைவர்கள் – புக்கிட் பெண்டேரா எம்பி ஷெர்லீனா அப்துல் ரஷீத், பெந்தோங் யங் சியூஃபுரா ஒத்மான், பாங்கி ஷாரெட்ஸான் ஜோஹான் , செணட்டர் ஷேக் உமார் பாகாரிப் அலி – கூட்டறிக்கையில், ஹாதியின் ( Adi Awang) கருத்து தவறானது வழிகாட்டல் என்றும், இஸ்லாத்தின் உண்மையான போதனைக்கு எதிரானது என்றும் கண்டித்தார், பக்காத்தான் ஹராப்பான்  பொதுச்செயலாளரும் உள்துறை அமைச்சரான டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், “இஸ்லாம் தன்னை  வெறுப்பவர்களையும் நியாயமாக நடத்த கற்பிக்கின்றது என்று வருத்தம் தெரிவித்தார்.

பி கே ஆர் துணை பொதுச்செயலாளர் ஜி. சிவமலர், துணை தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோரும்,  இப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்   என கோரியுள்ளனர்.

ம.சீ.ச (MCA) – ம.இ.கா (MIC) , கெராக்கான் (Gerakan) மற்றும் எம்.ஐ.பி.பி (MIPP) போன்ற பாரிசான் நேஷனல் (Barisan Nasional – BN) –  பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional – PN)  கூட்டணி கட்சிகள் இதுவரை மௌனம் காப்பது, முஸ்லிம் அல்லாத சமூகத்தின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஹாடி அவாங் (Adi Awang)  தலைவர் அலுவலகம் (PAS) இந்தக் கருத்துக்கள் சூழலில் இருந்து இன்று வரை ஒரு சரியான விளக்கம் கொடுக்காமல் இருப்பது – வேடிக்கையாக உள்ளது.

அரசியல் நலனுக்காக மதத்தை கருவியாக்கி, முஸ்லிம் அல்லாதவர்களை இழிவுபடுத்தும் இத்தகைய பேச்சுக்கள், நமது பன்முக நாட்டின் மக்களை மிகவும் கேவலப்படுத்துவதாகவும் தேர்தல் களத்தை கொள்கைப் போட்டியிலிருந்து மத அச்சத்திற்கு தள்ளுவதாகவும் பல தரப்பினர் கண்டிக்கின்றனர்.

“மதம் என்பது மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கானது; அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிரிப்பதற்கான கருவி அல்ல. ஊழல் செய்பவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் குற்றவாளியே. அதேபோல், அநீதி செய்பவர்களை மதத்தின் அடிப்படையில் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மலேசியா பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் அழகிய நாடு. இந்நாட்டின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையிலான அரசியல் பேச்சுக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியல் தலைவர்கள் மக்களைப் பிரிப்பதை விட, ஊழலை ஒழிப்பதிலும், மக்கள் நலனைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மதத்தை வைத்து ஊழலை நியாயப்படுத்தாதீர்; அரசியலுக்காக இன, மத ஒற்றுமையைச் சிதைக்காதீர். மலேசியாவின் எதிர்காலம் வெறுப்பில் அல்ல, ஒற்றுமையிலும் நீதியிலும்தான் அடங்கியுள்ளது!” என்று மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா”வின் ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு அவர்கள் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular