Wednesday, August 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கனடா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் கோகோ காப், ரிபாகினா.

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

நேற்று நடந்த காலிறுதி சுற்று போட்டியில் நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோத இருந்தார்.

ஆனால், காயம் காரணமாக பென்கிக் போட்டியில் இருந்து விலகினார்.இதையடுத்து, அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக அதிரடியாக ஆடிய ரிபாகினா அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், நாளை நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், எலினா ஸ்விடோலினா உடனும், மற்றொரு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடனும் மோதுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular