
சிம்பாங் ரெங்காம் நவ 20
இங்குள்ள இந்திய சமூகத்துடன் ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த தீபாவளி கொண்டாட்டம் இங்குள்ள டேவான் முவாபாகாட் சிம்பாங் ரெங்காமில் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தில் அனைத்து பங்சா ஜொகூரை சேர்ந்த பல இன மக்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சியை தருவதாக டத்தோ ஓன் ஹபிஸ் கூறினார்.
பங்சா ஜொகூர் மக்களின் நல்லிணக்கத்திற்கு இந்த ஒற்றுமை மிக அவசியம் என்றார் அவர்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு மிக அவசியம் என சுட்டிக்காட்டினார்.
ஒற்றுமையே நமது பலம் என்பதால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


