
எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகாவை பிரதிநிதித்து நான்கு வேட்பாள்கள் போட்டியிடுகின்றனர்.
கெமெலா தொகுதியில் சரஸ்வதிக்கு பதிலாக முன்னாள் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவீன் குமார் போட்டியிடுகிறார்.
காஹாங் தொகுதியில் நித்தியானந்தனுக்கு பதிலாக புதிய முகமான ருகேந்திரன் போட்டியிடுகிறார்.
ஜசெகவின் கோட்டையாக விளங்கும் பெர்லிங் தொகுதியில் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
புக்கிட் பாத்துவில் புதிய முகமான குமரன் போட்டியிடுகிறார்.
கடந்த 15 ஆவது மாநில சட்டமன்றத் தேர்தலில் கெமெலா,காஹாங்,தெங்காரோ ஆகிய தொகுதிகளை மஇகா கைப்பற்றியது.
புக்கிட் பாத்துவில் சொற்ப வாக்குகளில் கட்சி தோல்வியை தழுவியது.
இந்த தேர்தலில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.


