
கோலாலம்பூர் ஆக 10
இந்தோனேசியாவில் சுமார் 70,000போதை மாத்திரை, மற்றும் 6 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட மாஸ் விமானி தொடர்பான விசாரணையை மலேசிய அரச காவல்துறை (PDRM) தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் சமீபத்திய முன்னேற்றமாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான (KLIA) பணியாற்றும் சில ஊழியர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரின் பயணப் பெட்டிகள் புறப்படுவதற்கு முன்பு எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான், இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை அடையாளம் காண்பதற்காக விசாரணை பல்வேறு கோணங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
விசாரணையில், சந்தேகநபர் அம்பாங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து போதைப்பொருளைப் பெற்றதாகவும், பின்னர் KLIA-வில் முன்கூட்டியே செக்-இன் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
அண்மையில் அலை ஓசை மீடியாவில் அந்த மாஸ் விமானி செய்துள்ள செயலானது சாதாரணமான ஒன்றல்ல என்று செய்தி வெளியானது.
இந்த விசாரணையைத் திறம்பட முன்னெடுத்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு செயல் பட்டு வரும்
டத்தோ ஹுசைன் ஓமர் கான் அவர்களின் பணியை உண்மையிலேயே பாராட்ட த்தக்கதாகும்.
போதைப்பொருள் கடத்தல் போன்ற தீவிர குற்றங்களைத் தடுப்பதிலும், அதன் பின்னணியில் செயல்படும் வலையமைப்புகளை கண்டறிவதிலும் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானதாகும்.
டத்தோ ஹுசைன் ஓமர் கான் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது சிறப்பான பணிகள் தொடர்ந்து வெற்றியடைய அலை ஓசை சார்பாக, மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு அவர்கள் வாழ்த்தியுள்ளார்.


