Friday, August 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

குரல் இல்லாத உயிர்களின் குரல் கொடுப்போம்: மலேசியாவில் தெருநாய்களுக்கு நீதி வேண்டும்!

கோலாலம்பூர் ஆக 7

சில காலங்களாக மலேசியாவில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றன. கோப்பி மற்றும் தற்போது ராக்கி சம்பவம் போன்றவை, குரல் இல்லாத உயிரினங்கள் அனுபவிக்கும் துயரத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.
இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும், இந்த அநீதி நிறுத்தப்படுவதற்கு முன்பு?
kopi Terengganu (MBD), Rocky Klang (MBDK) சில உள்ளாட்சி அமைப்புகள்.


தொழில்முறை பயிற்சி இல்லாத நபர்களை தெருநாய்களை பிடிப்பதற்காக நியமிக்கின்றன. மனிதாபிமானமான முறைகள் இல்லாததால், இது தெருநாய்களுக்கு எதிரான மேலும் பல கொடுமைகளுக்கு வழிவகுக்கும்.

போதும்!
இது கோப்பி அல்லது ராக்கி பற்றிய விஷயம் மட்டும் அல்ல. இது தெருநாய்கள் அனைத்தையும் பற்றியது — அவற்றுக்கும் இரக்கம், மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.


மனிதநேயம், நீதி மற்றும் விலங்கு நலனில் நம்பிக்கை கொண்ட அனைத்து மலேசிய விலங்கு சம்மந்தப்பட்ட (SPCA), (DVS) குர‌ல் இல்லாத விலங்குகளை துன்புறுத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எ‌ன்று ம‌க்க‌ள் மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular