
எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மாநில மஇகா தயார் நிலையில் இருப்பதாக அது தலைவர் கே.ரவீன் குமார் கூறினார்.
தேசிய மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தின் கீழ் ஜொகூர் மாநில மஇகா வலிமையுடன் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 3 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதோடு, புக்கிட் பாத்து தொகுதியை கட்சி மீட்டெடுக்கும் என மாநில ஆட்சி குழு உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார்.

வரும் தேர்தலில் தெங்காரோ தொகுதிக்கு பதிலாக பெர்லிங் சட்டமன்ற தொகுதியில் கட்சி போட்டியிடும் என்றார் அவர்.
கடந்த மாநில தேர்தலில் தெங்காரோ,கெமெலா மற்றும் காஹாங் ஆகிய தொகுதிகளில் மாநில மஇகா வெற்றி பெற்றது.
புக்கிட் பாத்து தொகுதியில் 137 வாக்குகளில் கட்சி தோல்வி கண்டது.
இந்த தேர்தலில் ரவீன் குமார் ஜசெகவின் வலிமையான தொகுதியான பெர்லிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


