Wednesday, August 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

டத்தோஸ்ரீ அழகேசு தலைமையில் Fast Tech Club-ல் பிறந்த நாள் கொண்டாட்டம்.

கோலாலம்பூர் ஆக 4
தொழிலதிபரும் Fast Tech Security Services Malaysia நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான டத்தோஸ்ரீ அழகேசு தலைமையில் Fast Tech Club-இல் அந்த நிறுவனத்தை சேர்ந்த இரு முக்கிய பொறுப்பாளர்களுக்கு பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிரம்பானை டத்தோ பாலா மற்றும் R. விஜய் சகாவின் பிறந்த நாள் விழா Fast Tech Club-ல் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு பிரமுகர்களாக Fast Tech Security நிறுவனத்தின் இயக்குனர்கள் டத்தோ ஷர்மிளா, டத்தோ மகேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் சிறப்பு பிரமுகராக தொழிலதிபர் டத்தோஸ்ரீ செவாளியர் சர் டாக்டர் ஆர். குப்புசாமி கலந்து கொண்டார்.

செவாளியர் டாக்டர் குப்புசாமிக்கு டத்தோஸ்ரீ பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு இவரின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது என டத்தோஸ்ரீ அழகேசு தமதுரையில் கூறினார்.

இந்நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு டத்தோஸ்ரீ முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே டத்தோ பாலா மற்றும் R. விஜய் போன்ற இளைஞர்கள் வர்த்தக துறையில் சாதனை படைக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரபல உள்ளூர் கலைஞர்கள் தங்களின் சிறப்பான படைப்புகளை வெளிப்படுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular