
கோலாலம்பூர் ஆக 4
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான
ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து எதிர் வரும் ஆகஸ்டு 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கட்சியின் சிறப்பு பேராளர்கள் கூட்டத்தில் கட்சியின் பேராளர்கள் முடிவு செய்வர் என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பது? அல்லது இல்லையா? என்பதை சிறப்பு பேராளர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பின் வழி முடிவு செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சருமான அவர் சுட்டிக்காட்டினார்.
நடப்பு அரசாங்கத்தில் நீடிப்பதா? அல்லது தொடர்வதா? என்பதை முடிவு செய்யும் உச்ச அதிகாரம் கட்சியின் பேராளர்கள் கையில் மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவர் பதவியை தாம் கைவிடுவதாக அவர் தெளிவுபடுத்தினார்.
கடந்த 22 ஆண்டுகளாக இந்தப் பதவியை தாம் வகித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடசியில் உள்ள அடுத்த நிலை தலைவருக்கு இந்த பதவியை விட்டுக் கொடுக்க நேரம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்த மாநில சட்டமன்றத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே ஜசெக வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் ஒன்பது தொகுதிகளை கைப்பற்றி ஜசெக சாதனை பெற்றுள்ளது என்றார் அவர்.


