Tuesday, August 4, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிசிடிவி பதிவை வெளியிடுங்கள் – கெப்போங் எம்.பி. வலியுறுத்தல்.

கோலாலம்பூர் ஆக 4
மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் போதை மாத்திரை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக, கேஎல்ஐஏ விமான நிறுவனத்தில் உள்ள சிசிடிவி பதிவை வெளியிடும்படி கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனையும் கடந்து 70,000 போதை மாத்திரைகளை கொண்டு சென்று ஜக்கார்த்தா அனைத்துலக விமான நிலையத்தில் அந்த விமானி கைது செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
39 வயதுடைய அந்த விமானி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாக
AKPS நிறுவனத்தின் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
அந்த விமானி அனைத்து பாதுகாப்பு பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டது உண்மையானால், சிசிடிவி பதிவை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூலை 29 ஆம் தேதி 170 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுக்கார்னோ ஹத்தா அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த அந்த விமானி அங்கு கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சிசிடிவி பதிவு தான் முக்கியமான ஆதாரமே தவிர,AKPS-இன் உத்தரவாதம் அல்ல என்றார் அவர்.
இந்த பதிவை தணிக்கை செய்யாமல் வெளியிடப்பட வேண்டும்.
காரணம் இது பொது மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என அவர் சுட்டிக் காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular