Tuesday, July 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜொகூர் தேர்தல் பிரச்சாரம்:மஇகா வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சந்திப்பு

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர்களுடன் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்தினார்.
நேற்று புக்கிட் பாத்துவில் ஒரு விருந்து நிகழ்ச்சியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தேசிய தலைவருடனான இந்த சந்திப்பில் கட்சியின் உதவித் தலைவர்கள் டத்தோ முருகையா, டத்தோ அசோஜன், டத்தோ நெல்சன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் திரண்டு கலந்து கொண்டனர்.


மேலும் கட்சியை பிரதிநிதித்து கெமெலா, காஹாங், புக்கிட் பாத்து மற்றும் பெர்லிங் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அவர் சந்தித்து, தேர்தல் ஆயுதங்கள் குறித்து அவர் விளக்கம் தந்தார்.
இந்த சந்திப்பில் கட்சியின் தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து தேசிய தலைவருக்கு விளக்கம் தரப்பட்டன.
வரும் சனிக்கிழமை ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளையும் மஇகா கைப்பற்ற வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைத்து இந்திய வாக்காளர்களையும் அடையாளம் கண்டு அணுக வேண்டும் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular