Saturday, November 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

தலைமுடி அதிகம் கொட்டி வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா?…இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

உங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டி, வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா? இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளீர்களா? முக்கியமாக தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் நிறைய பணம் செலவழித்தும்,

அதற்குரிய பலனைப் பெறவில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் இந்த பிரச்சனைக்கு பல இயற்கைத் தீர்வுகள் உள்ளன.

ஆளிவிதை

ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, 2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.

அப்படி கொதிக்கும் போது, அதிலிருந்து ஓர் ஜெல் போன்று வரும், அப்போது இறக்கி குளிர வைத்து, அந்த ஜெல்லை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயம்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் வெங்காயத்தில் உள்ள சல்பர் தான்.

இளநீர்

இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை அரைத்து சாறு எடுத்து, அதனை முடியின் வேர்ஜ்களில் படும்படி தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முடியை அலச வேண்டும். இந்த முறை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

விளக்கெண்ணெய் மற்றும் நெல்லி எண்ணெய்

விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் தூங்குவதற்கு முன்பு, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, வழுக்கை உள்ள இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் சிறப்பான பொருள். இது தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது. எனவே 6-7 உலர்ந்த நெல்லிக்காயை 2 கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular