
ஜாலான் சான் பெங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் புடு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் தீபாவளி பெருநாளைக் கொண்டாடினர்.
புடு ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில் 104 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில் காவல்துறை அதிகாரி Tuan Inspector Azari, புடு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், புடு மாவட்ட முன்னாள் ஆளுநர் Dr. Paul Lee, உதவி ஆளுநர் விவியன் சூ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புடு ரோட்டரி கிளப் தலைவர் பெஞ்சமின் சோங் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிப் பைகள், தண்ணீர் பாட்டில்கள், பள்ளி சீருடைகள் உட்பட 2
தூய நீர் உற்பத்தி இயந்திரங்களைப் பள்ளிக்கு வழங்கினார்.
மேலும், இந்தத் தீபாவளி கொண்டாடத்தில் புடு ரோட்டரி கிளப் பட்டினியை முழுமையாக அகற்றும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் ஆண்டு முழுவதும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உணவு வழங்க புடு ரோட்டரி கிளப் முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக இதுவரை 55,000 வெள்ளி நிதி திரட்டப்பட்டதாகவும் பெஞ்சமின் சோங் நெகிழ்ச்சியாகக் கூறினார்.
சமூகப் பணிப்பாளர் Chua Poh Lee தலைமையிலான ஏற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பிற்கும் கடின உழைப்பிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், பள்ளி நிர்வாகத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் பெஞ்சமின் தனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.


