
அமெரிக்காவில் மசூதியின் வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நேரப்படி நேற்று நண்பகல் வேளையில், சான் டியாகோ கவுண்டியின் மிகப்பெரிய மசூதி வளாகத்திற்கு வெளியே 17 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். பின் அங்கிருந்து தப்பிய இருவரும் பக்கத்து தெருவில் காரை நிறுத்தி தங்களை தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தனர்.
இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அதிர்ஷ்டவசமாக மசூதிக்குள் செயல்பட்டு வந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடலை கைப்பற்றினர். பின் பக்கத்து தெருவில் காருக்குள் இறந்து கிடந்த இரு இளைஞர்களின் உடல்களையும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர்.


