
ஃபேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தற்போது தனது ஆட்குறைப்புத் திட்டங்களை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய அளவில் தனது பணியாளர் குறைப்புகளுடன், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பணிப்பாய்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒர் புதிய சுற்று அமைப்புசார் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது தனது 10% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கூடுதல் ஆட்குறைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
உலகளவில் சுமார் 8,000 ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
இந்த பணிநீக்கப் பணிகள் மே 20 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குகின்றன.


