Friday, July 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிந்தித்து வாக்களியுங்கள்!

நாளை ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில், இந்திய சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நமது இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்க நமது இந்திய வாக்காளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றார் அவர்.
“இந்தியர்களின் ஒவ்வொரு வாக்கும் பொன்னானது. ஆகையால் இந்தத் தேர்தலில் இந்திய சமூகத்தினர் தேசிய முன்னணிக்கு தங்கள் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி மஇகாவின் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்:

  • கெமெலாவில் பராமரிப்பு அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜொகூர் மாநில மஇகா தலைவருமான ரவீன் குமார் போட்டியிடுகிறார்.
  • புக்கிட் பாத்துவில் மாநில மஇகா செயலாளர் குமரன் போட்டியிடுகிறார்.
  • பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் மஇகா கூலாய் தொகுதி தலைவர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
  • காஹாங் தொகுதியில் மாநில மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் ருகேந்திரன் போட்டியிடுகிறார்.
    ஆகையால் இந்த நான்கு வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்வது மாநிலத்தில் உள்ள இந்திய வாக்காளர்களின் தார்மீகக் கடமையாகும் என்றார் அவர்.
    “ஜொகூரில் தேசிய முன்னணி மட்டுமே நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்பதை நமது இந்திய சமூகத்தினர் நினைவில் கொள்ள வேண்டும். தேசிய முன்னணிக்கு வாக்களித்தால் மட்டுமே இந்திய சமூகத்திற்கு சிறந்த நன்மைகளைப் பெற்றுத் தர முடியும்” என அவர் மேலும் நினைவுறுத்தினார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular