Saturday, July 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

4 தொகுதிகளையும் மஇகா கைப்பற்றும்-டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை

நாளை ஜூலை 11 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளையும் மஇகா கைப்பற்றும் என கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் புக்கிட் பாத்து,காஹாங்,பெர்லிங் மற்றும் ஆகி தொகுதிகளில் மஇகா தேசிய முன்னணி சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறது.
மாநிலத் தேர்தலின் இறுதிக் கட்ட பிரச்சாரத்தை தொடர்ந்து, இன்று கூலாய் தொகுதி மஇகா அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்தினார்.
இதுவரை நடந்த தேர்தல் பிரச்சார களின் நிலவரங்கள் குறித்து கட்சித் தலைவர்களுடன் அவர் கேட்டறிந்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து நாம் மனநிறைவு அடைவதாக அவர் தெரிவித்தார்.


நாளை நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் மஇகா வேட்பாளர்களுக்கு ஜொகூர் இந்திய வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் இந்திய சமூகத்தின் வசந்தமான எதிர்காலம் தேசிய முன்னணியிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் மஇகா உதவித்தலைவர்கள் டத்தோ முருகையா, டத்தோ அசோஜன்,மஇகா கூலாய் தொகுதி நிரந்தரத் தலைவர் சுப்பையா, ஜொகூர் மஇகா மகளிர் அணி உதவிச் செயலாளரும் கூலாய் தொகுதி மகளிர் அணி செயலாளருமான புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular