
Race Walk Association Malaysia ஏற்பாடு செய்த பெருநடை போட்டியில் 119 ஜூனியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பெருநடை போட்டி சுங்கை பீசியில் உள்ள UPNM அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டரசு பிரதேச தடகள சங்கம்,மைலோ மலேசியா ஆதரவில் இந்த போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.
கிள்ளான் பள்ளத்தாக்கு மட்டுமின்றி கெடா,திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
சுமார் 60 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்றனர்.

Race Walk Association Malaysia நடத்தும் முதலாவது JDP திட்டம் இதுவாகும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கூட்டரசு பிரதேச தடகள சங்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ. புலேந்திரன் பரிசுகளை எடுத்து வழங்கினார். இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும் மற்றும் வெற்றியாளர்களுக்கும் அவர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு மைலோ மலேசியா டி சட்டைகள் மற்றும் குளிர் பானங்களை வழங்கி சிறப்பித்தது.
இதன் அடுத்த கட்ட போட்டி எதிர் வரும்
ஆகஸ்டு மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



