
நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகா அடைந்த 100% வெற்றிக்கு கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என மஇகா உதவி தலைவர் டி. முருகையா கூறினார்.
இந்த தேர்தலில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தின் கீழ் கட்சி வியூகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி பெரும் சாதனை படைத்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தேர்தலின் தொடக்க கால முதல் கட்சிப் போட்டியிடும் நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என தேசிய தலைவர் வலியுறுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடந்த முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்லிங்,கெமெலா, புக்கிட் பாத்து மற்றும் காஹாங் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை மஇகா கைப்பற்றியது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி 48 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி பெரும் சாதனையை ஏற்படுத்தியது.
குறிப்பாக ஜசெகவின் கோட்டையாக திகழ்ந்து வந்த பெர்லிங் சட்டமன்ற தொகுதியை மஇகா கைப்பற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக முருகையா தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் ஆதரவு மஇகாவிற்கு திரும்பிவிட்டது என்பதை இந்த வெற்றி உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.


