Thursday, May 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஈரான் மீதான கொடூர தாக்குதல் திட்டம்… கடைசி நேரத்தில் டிரம்ப் அறிவிப்பால் நிம்மதி

ரான் மீது நடத்த் திட்டமிடப்பட்டிருந்த ராணுவ் தாக்குதலை ஒத்திவைப்பதாக அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்தார். “தீவிர பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலவீனமான போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது, இல்லையெனில் சண்டை மீண்டும் தொடங்கும் என்று டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்த விவரங்களை அதிபர் டிரம்ப் தெரிவிக்கவில்லை, ஆனால் “ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில், ஈரான் மீது ஒரு முழுமையான, பெரிய அளவிலான தாக்குதலை உடனடியாக தொடுக்க தயாராக இருக்குமாறு” அமெரிக்க ராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக கூறினார்.

இன்று (மே 19) தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் இதற்கு முன்பு வெளியிடவில்லை, ஆனால் வார இறுதியில் அவர், “ஈரானுக்கு நேரம் விரைந்து கொண்டிருக்கிறது, அவர்கள் மிக வேகமாக செயல்பட தொடங்க வேண்டும், இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது” என்று எச்சரித்து இருந்தார்.

அத்தகைய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான மாறிவரும் வரையறைகளுடன், ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டாவிட்டால், ஏப்ரல் மாத மத்தியில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வரக்கூடும் என்று டிரம்ப் பல வாரங்களாக அச்சுறுத்தி வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular