Sunday, July 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய முன்னணிக்கு அபார வெற்றியை தந்த ஜொகூர் மக்களுக்கு நன்றி-டத்தோ லோக பாலா

நேற்று நடைபெற்ற முடிந்த ஜொகூர் மாநில 16 ஆவது சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு அபார வெற்றியை வழங்கிய ஜொகூர் மாநில மக்களுக்க
(பங்சா ஜொகூர்) தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோக பாலா கூறினார்.
இந்த தேர்தலில் 56 தொகுதிகளில் போட்டியிட்டு 48 தொகுதிகளை கைப்பற்றி தேசிய முன்னணி மாபெரும் சாதனையை படைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய முன்னணியின் பங்காளி கட்சி என்ற நிலையில் நடந்து முடிந்த மாநில சட்டமன்ற தேர்தலில் பிபிபி கட்சி அயராது உழைத்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிபிபி கட்சியின் தேர்தல் பணி குழுவினர் தேசிய முன்னணி போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த அபார வெற்றி எதிர் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை கைப்பற்றுவது உறுதி என்பதை பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.
நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் கோட்டையாக திகழ்ந்து வந்த சில தொகுதிகளை கைப்பற்றி தேசிய முன்னணி சாதனை படைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளில் தேசிய முன்னணி 48 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular