Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தடகள நிர்வாகமா அல்லது குடும்ப ஆதிக்கமா?-இதற்கு ஒரு முடிவு கட்டியே தீர வேண்டும்!

மலேசிய தடகள சங்கத்தின் தலைவர் காரீம் இப்ராஹிம் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் நூர்ஹயாதி காரீம் பதவிகள் குறித்து உலக தடகள சம்மேளனம்(World Athletics) எடுத்துள்ள நிலைப்பாட்டை விளக்கும் பல செய்தி குறிப்புகள் மற்றும் கசிந்த கவுன்சில் கூட்டம் பதிவுகள் வெளியான பிறகும், இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பல தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலக தடகள சம்மேளத்திடமிருந்து வந்த இரண்டு முக்கியமான கடிதங்கள் கிட்டத்தட்ட 3 மாதங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவை ஏதோ சாதாரண ஆவணங்கள் அல்ல, ஒரு உறுப்பினர் கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள் ஆகும். இந்த சங்கத்தின் தலைவரின் மகளாகவும் இருந்து வரும் அதன் பொதுச்செயலாளர், கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து இவ்வளவு முக்கியமான தகவல்களை மறைத்துள்ளது எப்படி நியாயப்படுத்த முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பொறுப்புக் குரல்
(Accountablity) எங்கே? ஒரு தந்தையும் மகளையும் காப்பாற்றுவதற்காக தடகள விளையாட்டின் நேர்மையை நாம் இப்போது விட்டுக் கொடுக்கிறோமோ?
இது நிர்வாகம், வெளிப்படை தன்மை மற்றும் நீதியை பொருத்தவரை எத்தகைய முன் உதாரணத்தை ஏற்படுத்துகிறது?
எதார்த்தத்தை எதிர்கொள்ள நாம் இன்னும் எதற்காக காத்திருக்கிறோம்?
உலக தடகள சம்மேளனம் தடைகளை விதிக்கும் வரை நாம் காத்திருக்க போகிறோமா? அதற்குள் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அமைதி காத்த ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.
எனவே கேள்வி இது தான்: இதற்கான ஒரு முடிவு எப்போது எடுக்கப்படும்? இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது.
ஆகையால் எங்களுக்கு பொறுப்புக் குரல்(Accountablity) தேவை என இவர்கள் விளைவி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular